ஒரு லட்சம் இன்கிரிமெண்ட் கொடுக்குறாங்க!!!!
உலகம் முழுக்கவும் விமான நிறுவனங்களுக்கு நல்ல விமானிகள்கிடைப்பதில் பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் திவால் நோட்டீஸ் அளித்த கோஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது விமானிகளை தக்கவைக்க புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஒரு மாத சம்பளம் ஸ்பைஸ்ஜெட்டில் ஏழரை லட்சம் ரூபாயாக இருக்கிறது. ஆனால் கோஃபர்ஸ்ட்டில் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது. நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து விமானிகளும் கவலை தெரிவித்துள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் விமானிகள் சம்பளம் மாதத்துக்கு 1 லட்சம் ரூபாய் அதிகரிக்க கோஃபர்ஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தில் உள்ள விமானிகள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி திவால் நோட்டீஸ் அளித்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்,தனது சேவையை மீண்டும் துவங்க சில சலுகைகளும் கிடைத்துள்ளன. எனவே தனது பணியாளர்களை தக்க வைத்துக்கொள்ள வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதியில் இருந்து விமானிகளுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாயும், ஃபர்ஸ்ட் ஆபிசர்கள் பதவியில் இருப்போருக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாயும் கூடுதலாக தர கோஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதே நிலையில் சென்றால் விமான நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இண்டிகோ நிறுவனம் அடுத்தாண்டு மட்டும் ஆயிரம் பேரை புதிதாக பணியில் சேர்க்க திட்டமிட்டு இருக்கிறது. 4ஆயிரத்து 200கேபின் க்ரூ பணியாளர்களை பணியில் சேர்க்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனமும் 900 புதிய பைலட்டுகளை வேலைக்கு எடுக்க பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. இந்த சூழலில் இருக்கும் ஊழியர்களை தக்கவைக்க கோஃபர்ஸ்ட் நிறுவனம் படாதபாடு படுகிறது. அமெரிக்க நிறுவனம் இன்ஜின் பழுதுகளை சரிசெய்துதரவில்லை என்று கோஃபர்ஸ்ட் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென சேவைகளை நிறுத்தி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல வாடியா குழுமத்தால் இயக்கப்படும் கோஃபர்ஸ்ட் நிறுவனம், கோஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.