மாத்தி யோசி…
வணிக பயன்பாட்டு வாகனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாற்று எரிபொருள் பயன்பாட்டை பரிசோதித்து வருகிறது. வழக்கமான எண்ணெய் எரிபொருளாக இல்லாமல் சிஎன்ஜி, பவர் டிரெயின்கள் என பலதரப்பட்ட மாற்று ஏற்பாடுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. மாற்று எரிபொருள் கட்டமைப்பையும் வேகமாக அமைக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக சிஎன்ஜி எனப்படும் அடைக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக இருக்கிறது. 2030-ல் இது 10,000 ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது. அடைக்கப்பட்ட எரிவாயு போலவே திரவு இயற்கை எரிவாயுவும் இந்தாண்டு இறுதிக்குள் 50 நிலையங்கள் அமைய இருப்பதாக கூறப்படுகிறது. 2027-ல் இந்த எண்ணிக்கை ஆயிரமாக உயரும் என்றும் நம்பப்படுகிறது. இவை தவிர்த்து பசுமை ஹைட்ரஜனையும் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஈடி-5 உள்ளிட்ட அடுத்த தலைமுறை உயிரி எரிபொருட்களையும் வணிக வாகனங்களில் பயன்படுத்த டாடா தயாராகி வருகிறது. இதேபோல் எத்தனால் பயன்படுத்தப்படும் வாகனங்களின் உதிரி பாகங்களும், எந்த எரிபொருள் போட்டாலும் இயங்கும் வகையிலான வாகனங்களை 2027-க்குள் களமிறக்கவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இது மட்டுமின்றி மெத்தனாலையும் எரிபொருளாக வைத்து வணிக வாகனங்களை இயக்கும் திட்டமும் இருக்கிறதாம். உயிரி எரிபொருளான பி30 யை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தவும், உள்ளூரில் கிடைக்கும் முன்பு அதற்கான ஒழுங்குமுறை ஆவணங்கள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறதாம்.