இது பயங்கரமான திட்டமா இருக்கே..!!!
வரி வசூல் என்பது ஒரு தேசத்தின் முக்கிய ஆற்றலாக திகழ்கிறது. இந்த நிலையில் ஆதாரத்தில் இருந்து பெறப்படும் வரியான TCSயும், TDSஐயும் இணைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் டிசிஎஸ் வகை வரி, வெளிநாட்டில் கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்யப்பட்டால் 20 விழுக்காடு ஆக உயர்த்தப்பட இருக்கிறது. பொருளை விற்கும்போது டிசிஎஸும், பொருளுக்கு அரசாங்கம் போடும் வரிப்பிடித்தம் TDS என்றும் அழைக்கப்படுகிறது. சிறு வணிகம் செய்வோருக்கு டிசிஎஸ் வரம்பு 7 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சி, டிசிஎஸ், TDS அடிக்கடி செலுத்துவோருக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று தொழில் வர்த்தக கூட்டமமைப்பான CII வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டில் பொருட்களை இந்திய கிரிடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் அதற்கு 20 விழுக்காடு வரி டிசிஎஸ் வகையில் போடப்படும் என்று அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அதில் 7 லட்சம் வரை மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. சாதாரண பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த டிசிஎஸ்,டிடிஎஸ் இணைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை வெளிநாடுகளில் மருத்துவம் மற்றும் கல்விப்படிக்க செல்வோருக்கு டிசிஎஸில் இருந்து 7 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தொகைக்கு மேலே சென்றால் 5 விழுக்காடு டிசிஎஸ் வசூலிக்கும் முறையும் உள்ளது. எஜூகேஷன் லோன் வாங்கி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் டிசிஎஸில் பூஜ்ஜியம் புள்ளி 5 விழுக்காடு வரி வசூலிக்கப்படுகிறது.