இது தான் FULL TIME வேலை போல இருக்கு…
அமெரிக்காவில் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பொறியியல் துறை சார்ந்த உற்பத்திகளை 3M நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது பணியாளர்களில் 2 ஆயிரத்து 500 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மின்னணு சாதனங்கள் நுகர்வு குறைந்துள்ளதால் ஆர்டர்கள் குறைந்துள்ளதாகவும்,அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சிக்கல் காரணமாகவும் இந்த பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் 3M நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் 3-ம் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் நிறுவனம் இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆசியாவில் இந்த நிறுவன பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளதால் நிதிசிக்கல் அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் ஆற்றலுக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் காரணிகளை அடுக்குகிறது. ஆண்டுக்கு ஆண்டு நடக்கும் விற்பனையில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு 10% விற்பனை குறைந்துள்ளதாக அந்நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது 8.3 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 7.2பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே பொருட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஒரு பங்குக்கு 27 சென்ட் குறைந்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது கடந்தாண்டு ஒரு பங்கின் லாபம் 2.45 டாலராக இருந்த நிலையில் நடப்பாண்டு அது 2.28டாலராக சரிந்துள்ளதாக 3எம் தெரிவிக்கிறது.