தங்கம் விலை உச்சம் தொட இதான் காரணம்..
இதுவரை இல்லாத புதிய உச்சத்தை ஆபரணத் தங்கம் தொட்டுள்ளது. இதற்கு முக்கிய கராணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 453 டாலர்கள் என்ற புதிய உச்சத்தை தொட்டதே மிகமுக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க பணவீக்க விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், இதனால் உயர்த்தப்பட்ட கடன் விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன் விகிதத்தை குறைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன் விகிதத்தை குறைக்கும் என்று தகவல் கசிந்திருக்கிறது. உலகளவில் நடக்கும் போர்கள் குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதலும் தங்கம் விலை உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதேபோல் சீனாவை நோக்கி சென்ற கச்சா எண்ணெயை செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கியதும் தங்கம் விலை உயர முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சீனாவின் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியை சரி செய்யும் வகையில் தங்கத்தின் மீது அதீத முதலீடுகளை சீனா குவித்து வருகிறது.