வாராக்கடன் இம்புட்டா தள்ளுபடி செஞ்சிருக்காங்க….
சாதாரண மனுஷன் கடன வாங்கிட்டு திரும்ப கட்டலண்ணா ஆயிரத்தெட்டு நோட்டீஸ் அனுப்பி டார்ச்சர் செய்யும் பொதுத்துறை வங்கிகள்,கடந்தாண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். இது 2021 காலகட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை விடவும் அதிகமாகும். அதாவது 2021 டிசம்பர் காலாண்டில் 23 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி கேர் என்ற அமைப்பு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் 81 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் 90 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை விட 2022ம் ஆண்டு சற்று குறைந்துள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 2022-ல் டிசம்பருடன் முடியும் காலாண்டில் 2ஆயிரத்து 522 கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது. இது கடந்த2021-ல் 1,883 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ததைவிடவும் அதிகமாகும். இத்தனை பெரிய தொகை தள்ளுபடி செய்துவிட்டபிறகும் கூட இந்திய வங்கிகளில் வாராக்கடனின் விகிதம் 5%ஆகத்தான் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.