இம்புட்டு பணம் வராக்கடனா தள்ளுபடியா?
வணிக நோக்கத்துடன் செயல்படும் வங்கிகள் குறித்து மத்திய அரசு மக்களவையில் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது, அதாவது கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சத்து 09 ஆயிரத்து 511 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு, அது திரும்ப வரவில்லை என்று கூறியுள்ளது. கொடுத்த கடனை திரும்ப வாங்கும் நடவடிக்கையில் வங்கிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 4 லட்சத்து 80 ஆயிரத்து 111 கோடி ரூபாய் பணத்தை பொதுத்துறை வங்கிகள் திரும்பப்பெற்றுள்ளதாகவும்,1 லட்சத்து 3 ஆயிரத்து 45 கோடி ரூபாய் வராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள 10லட்சம் கோடி ரூபாய் கடனில் அதிகபட்சமாக 2 புள்ளி 04 டிரில்லியன் கோடி ரூபாய் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியும் 923.39 பில்லியன் ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளனர்..இதேபோல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்,யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களும் அதிக தொகையை தள்ளுபடி செய்துள்ளனர். கடனை திரும்ப வாங்க முடியாத வங்கிகள், சட்டரீதியில் சொத்துகளை மீட்கும் முயற்சியில் வங்கிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாதவர்கள் விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள சூழலில் ,சொத்துகளை ஏலமிடும்போது மட்டுமே பெயர்களை வெளியிட இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.