இந்த துறை இந்திய பொருளாதாரத்திற்கு ரொம்ப முக்கியம்!!!!
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் என்பவர் உள்ளார். உணவு பதப்படுத்தும் துறை குறித்து இவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்த துறைதான், இந்திய பொருளாதாரத்தில் மிகவும் சிக்கலான துறை என்று தெரிவித்தார். இந்த துறையில் புதிய வேலைவாய்ப்புகள்,ஏற்றுமதி அதிகரிப்பை செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் உணவுத்துறையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் உணவுத்துறையில் இந்த தொழில்கள் அதிகம் இடம்பெற ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பரமேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இந்திய பொருளாதாரம் வளர இந்த துறை மிகமிக முக்கியம் என்றும் தெரிவித்த அவர் விவசாயத்துறையினரின் வருவாயை அதிகரிக்க உணவு பதப்படுத்தல் துறை மிக அவசியமான ஒன்று என தெரிவித்தார். உலகளாவிய சந்தையில் உணவு பாதுகாப்பு என்பது மிகமிக முக்கியமானதாக உள்ளதாக சுட்டிக்காட்டிய பரமேஸ்வரன் இந்த துறையை வளப்படுத்தவும்,முன்னேற்றவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக செய்து வருவதாக தெரிவித்தார்.
இந்த துறையிலும் கூட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், சிறுதானியங்களை ஊக்கப்படுத்த சிறுதானிய ஆண்டு இன்னும் ஒருமாதத்தில் துவங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் இந்தியா இதனை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உணவு வீணாவதை தடுக்க பதப்படுத்தல் துறை மிகமிக அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
உணவுத்துறையிலும் டிஜிட்டல் நுட்பங்களை களமிறக்க வேண்டிய தேவை உள்ளதாக சுட்டிக்காட்டிய ஐயர்,அடுத்த ஓராண்டில் சிறுதானியங்கள் உற்பத்தியில் அதிக முன்னேற்றங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ள அவர், மிகவும் சிக்கலான இந்த துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.