இது தான் நடப்பு கணக்கு பற்றாக்குறையை நீக்குமாம்!!!
ஆக்சிஸ் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக நீல்காந்த் மிஸ்ரா என்பவர் இருக்கிறார். இவர் இந்தியாவின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை பற்றி தனது கருத்தை முன்வைத்துள்ளார். அதில் சேவை சார்ந்த துறைகளின் ஏற்றுமதி என்பது மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாகவும்,தகவல்தொழில்நுட்பம் இல்லாத மற்றத் துறைகளில் இந்த சேவை திட்டம் நல்ல வளர்ச்சி பெற்றிருப்பதாகவும்,நடப்புக்கணக்கு பற்றாக்குறையை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த வகை ஏற்றுமதிகள் துடைத்து எடுத்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.சேவைத்துறையின் வளர்ச்சி அதிகரித்ததை அடுத்து எண்ணெய் விலை குறைந்ததாகவும், இந்த அளவானது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2விழுக்காடு என்றும் 2021-22 காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 38.7 பில்லியன் டாலராக இருந்தது. இது தற்போது 67 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
சேவை சார்ந்த துறைகள் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும்,உள்நாட்டிற்குள்ளேயே பயணம் செய்வோரையும் கணக்கில் எடுத்தால் 30லட்சம் தரமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதும் நீல்காந்தின் கருத்தாகும்.
அப்படி என்னதான் வேலை என்றால் ஆலோசனை கூறுவதே ஒரு வேலைதான் என்றும் மிஸ்ரா கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து செமிகண்டக்டர்கள் உற்பத்தி வெளியே சென்ற நிலையில் அவை மீண்டும் இந்தியாவிற்கே வர வாய்ப்புள்ளதாகவும்,பொறியியல் சார்ந்த சேவைகள் இந்தியாவிற்கு திரும்பும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சேவை ஏற்றுமதியின் மதிப்பு 25.30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாகவும் இது கவலைபட வைக்கும் எண்ணிக்கை இல்லை என்றும் மிஸ்ரா கூறியுள்ளார். நவீன சேவைகள் துறையில் இந்தியாவின் பங்கு 2018-ல் 6%ஆக இருந்தது.தற்போது இது 8%ஆக உயர்ந்திருக்கிறது.