“செயற்கை நுண்ணறிவு நெறிபடுத்துவது முக்கியம்”
கூகுள் கிளைவுடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது அவை முறைபடுத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பல தொழில்நுட்பங்கள் முறைபடுத்தப்பட்டு அவை பயன்பாட்டுக்கும் வந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், முறைப்படுத்தாமல் விட்டால் இவை வெறும் மென்பொருட்கள் தவறாக பயன்படவும் வாய்ப்புள்ளதாக கூறினார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை முறைப்படுத்த திட்டமிட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், டீப்ஃபேக் மற்றும் மற்ற தவறான தகவல்கள் பரவுவதை இந்தியா கனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக கூறினார்.
பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் திட்டங்களை மாற்றியும் இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
தரவு மையங்கள் மற்றும் தற்போது எப்படி கூகுள் நிறுவனம் செயல்படுகிறது என்பதையும் குரியன் விவரித்தார்.
பயிற்சி வகுப்புகள் குறைவாக புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறிய அவர், தண்ணீரில் குளுமை அடையும் வகையில் தங்கள் தரவு மையங்கள் இயங்குவதாக கூறினார். வருங்காலத்தில் இன்னும் அதிக தயாரிப்புகள் கூகுள் கிளைவுடில் இருந்து வரும் என்றும் குரியன் குறிப்பிட்டார்.