திரட்ஸ் ..நூல் அறுந்துபோச்சே..!!!
டிவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்த திரெட்ஸ் என்ற செயலிக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த செயலி அறிமுகமாகி ஒருவாரம் ஆகிய நிலையில் அதனை அடிக்கடி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. ஆண்டிராய்டு இயங்குதளத்தில் திரெட்ஸ் செயலியை அடிக்கடி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது உலகளவில் 4 கோடியே 90 லட்சம் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். இது தற்போது 2 கோடியே 36 லட்சமாக சரிந்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை சராசரியாக 10 கோடி பேர் ஆண்டிராய்டு போன்களில் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 7ஆம் தேதி இந்த செயலியை சராசரியாக ஆண்டிராய்டு போன்களில் மக்கள் 21 நிமிடங்கள் பயன்படுத்திய நிலையில் தற்போது இது வெறும் 6 நிமிடங்களாக குறைந்துள்ளது. டிவிட்டரில் உள்ள பல அம்சங்கள் திரெட்ஸ் செயலியில்குறைவதாக தகவல் வெளியான நிலையில் அதனை மேம்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. டிவிட்டர் மற்றும் திரெட்ஸ் இரண்டு செயலிகளும் தங்கள் பயனர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டே வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டர் பக்கம் செல்வதையே பலரும் தவிர்த்து வருகின்றனர். இன்னும் சில அடிப்படையான அம்சங்களை சரி செய்தால் திரெட்ஸ் செயலியை முழுவீச்சில் முன்னேற்ற முடியும் என்றும் இதுவரை புதிதாக 10 கோடி பேர் திரெட்ஸ் செயலிக்கு இணைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த தரவுகள் ஆண்டிராய்டில் மட்டுமே வெளியாகியுள்ளன. இன்னும் ஆப்பிள் தரவுகள் வெளியாகவில்லை.