தலைப்பாவ கட்டவா? அவுக்கவா????
பெரிய தொகை கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு தினம்தினம் எதையாவது செய்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்கிறார் மஸ்க். இந்த நிலையில் டிவிட்டரின் தலைமை பதவியை வைத்துக்கொள்ளவா வேண்டாமா என டிவிட்டரிலேயே அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கருத்து சுதந்திரம் பற்றி பேசி வரும் எலான் மஸ்க் , தனது சொந்த நிறுவனத்தில் தலைமை பதவி வைத்துக்கொள்ளவா வேண்டாமா என கேள்வி எழுப்பியுள்ளார். பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம்,உள்ளிட்ட நிறுவனங்களை இணைப்பது தடுக்கப்படும் என்று டிவிட்டர் கூறியுள்ள சூழலில் தலைமையை ஏற்பதா வேண்டாமா என்று கேட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது டிவிட்டரின் தலைமை பதவியை வைத்துக்கொள்ளவா வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய சிறிது நேரத்திலேயே அவரே அதை நீக்கியதுடன்,மன்னிப்பும் கேட்டுள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள்,இது பற்றி உடனடியாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.