டிக்டாக் வருமானம் 60 %உயர்வு..
நொடிகளில் விஷயத்தை நச்சின்னு கூறும் செயலியான டிக்டாக் 2023 ஆம் ஆண்டில் 60 விழுக்காடு லாபம் பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் EBITDA 2022–ல் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. தற்போது இது 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. உலகளவில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. டென்சென்ட் நிறுவனத்தை பைட்டான்ஸ் நிறுவனம் முதல்முறையாக மிஞ்சியிருக்கிறது. டென்சென்ட், அலிபாபா ஆகிய நிறுவனங்களைவிடவும் அதிக லாபத்தை டிக்டாக் பெற்றுள்ளது. அமெரிக்காவில் டிக்டாக் ஷாப்களும் திறக்கப்பட்டுள்ளன. இது டிஜிட்டல் மார்கெட்டிஙை விடவும் அதிக வெற்றியை ஈட்டித்தந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவில் மட்டும் டிக்டாக் நிறுவனத்தை 17 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற அவைகளில் விவாதங்கள் நடந்து வருவதால் இறுதி முடிவுகள் தாமதமாகி வருகின்றன. பைட்டான்ஸ் நிறுவனம் அதன் கேமிங் பிரிவில் பலரை வேலையைவிட்டு அனுப்பிவிட்டது. ஜெனரேட்டிவ் ஏஐ, பிரத்யேக சாட்பாட் மற்றும் பெரிய மொழி மாடலை அந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் தடை விதிக்க வாய்ப்புள்ளது தொடர்பாக பெரிய பிரச்னைகள் ஒறு பக்கம் இருந்தாலும்,மற்றொரு பக்கம் பங்குச்சந்தைகளில் நுழைவது கேள்விக்குறியாகியிருக்கிறது. பைட்டான்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அந்நிறுவனத்தின் மதிப்பு இருந்தது.