“வருமான வரியை எளிமையாக்கும் நேரம் வந்துவிட்டது”!!
மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கும் பணிகளை நிதி ஆயோக் என்ற அமைப்பு செய்து வருகிறது. இதன் முன்னாள் துணைத்தலைவராக இருந்தவர் அர்விந்த் பனகாரியா. இவர் அண்மையில் தனியார் இணையதளத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வரும் 1ம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரி செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். விலக்குகள் இல்லாத வருமான வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அர்விந்த் கேட்டுக்கொண்டுள்ளார். உலகமே பொருளாதார மந்தநிலையால் தடுமாறும் போது இந்தியா வளர்ச்சியில் தெளிவாகவும்,நிதானமாகவும் இருப்பதாக அர்விந்த் சுட்டிக்காட்டியுள்ளார். வரிச்சலுகைகளை நீக்கும் பட்ஜெட் இருந்தால் பொருளாதாரம் வளரும் என்று ஏற்கனவே பிரதமரின் ஆலோசனைக் குழுவின் தலைவரான பிபேக் தெப்ராய் என்பவரும் கூறியிருந்த நிலையில், நிதியமைச்சர் வரும் 1-ம் தேதி என்ன பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி முழுநீள பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.