டிஷ்யூ பேப்பர் இலவசம் வங்கியின் நூதன விளம்பரம்!!!!
இலவசம் என்ற ஒற்றை வார்த்தை தான் உலகம் முழுவதும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் சீனாவில் ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டது. ராட்சத டாய்லெட் பேப்பர் ரோல்களை கட்டிய வங்கி நிர்வாகம், 5 விநாடிகளில் எவ்வளவு டாய்லட் காகிதங்களை எடுக்கிறார்களோ அது அவர்களுக்கு சொந்தம் என போட்டி வைத்தது. இதனை கேள்விப்பட்ட ஏராளமான சீன முதியவர்கள் வங்கி முன்பு ஆஜராகினர். இதனால் வங்கி முன்பு கூட்டம் கூடியது. சீனாவில் உள்ள குறிப்பிட்ட தனியார் வங்கியின் இந்த செயல் தொடர்பான வீடியோ அந்நாட்டு சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் நபர்கள் பெரியவர்களை வங்கி இழிவுபடுத்திவிட்டதாகவும் மூத்த குடிமக்களுக்கு இலவசமாகவே அளித்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் பொது கழிப்பிடங்களில் வைக்கப்படும் டிஷ்யூ காகிகதங்களை மூத்த குடிமக்கள் அதிகம் எடுத்துச்செல்லும் நிலையில், காகிதங்களை வீணடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியே வங்கி இத்தகைய சேவையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.