அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்..
தங்கத்தின் மீது பேராசை கொண்டவர்கள் இந்தியர்கள் என்று சிலர் நினைக்கலாம் ஆனால் அதுதான் கிடையாது.. சரி வேறு எந்த நாடுகள் எவ்வளவு தங்கம் வைத்திருக்காங்க என்று ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாமா? 8 ஆயிரத்து 133 டன் தங்கத்துடன் அமெரிக்கா முதலிட்டத்தில் இருக்கிறது. இதன் மதிப்பு 579,050.15 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. ஜெர்மனியின் கைவசம் 3 ஆயிரத்து 352 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 2,,38,662.64 மில்லியன் டாலர்கள்இதற்கு அடுத்த இடத்தில் இதாலி உள்ளது. இத்தாலியின் வசம் 2,451.84 டன் தங்கம் இருக்கிறது. 1,74,555மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த தங்கம் மதிப்பாக கொண்டுள்ளது. . 4 ஆவது இடத்தில் பிரான்ஸ் இருக்கிறது. பிரான்சின் வசம் 2,436.88 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு 1,73,492 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. 5 ஆவது இடத்தில் ரஷ்யா இருக்கிறது. ரஷ்யாவிடம் 2,332 டன்தங்கம் கையிருப்பு இருக்கிறது. இதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் 1,66,076.25 மில்லியன் ஆகும். ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் சீனா இருக்கிறது. சீனாவிடம் தங்க கையிருப்பின் அளவு 2,262.45 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்போ 1,61,071.82மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 69,495.46 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஆயிரத்து 40 டன் தங்கம் கையிருப்பு வைத்துள்ள ஸ்விட்சர்லாந்து இந்த பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கிறது. ஜப்பானிடம் 845.97 டன் தங்கம் இருக்கிறது. இதன் சர்வதேச மதிப்பு 60,227.84 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். டாப் 10 பட்டியலில் இந்தியாவுக்கு 9 ஆவது இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்தியாவிடம் 822.09டன் தங்கம்தான் உள்ளது. இதன் மதிப்பு 58,527.34 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. நமக்கு அடுத்த இடத்தில் நெதர்லாந்து இருக்கிறது நெதர்லாந்தின் வசம் 612.45 டன் தங்கம் இருக்கிறது.43,602.77 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கிறது.