Work From Home-க்கு Leave – Office வர சொல்லும் IT-கள்..!!
முன்னணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளன.
Covid-19 தொற்றால் மாற்றம்:
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
வீட்டிலிருந்து பணி:
தினக்கூலி வாங்குபவர்கள் கட்டாயம் பணிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் தவிர, IT என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒருசில செய்தி ஊடகங்கள் தங்கள் பணியாளர்களை வீடுகளிலிருந்தே பணியாற்றும்படி தெரிவித்துள்ளன. இதனால் சாதக, பாதகங்கள் இரண்டுமே இருந்தாலும், பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக அனைவரும் இந்த முறைக்கு தங்களை மாற்றி கொண்டுள்ளனர்.
Work From Home-க்கு Leave:
இந்த நிலையில்தான் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான Wipro, Cognizant, Infosys, TCS உள்ளிட்டவை தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளன. Wipro நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வரும் மார்ச் 3-ம் தேதியிலிருந்து அலுவலகம் வந்து பணியாற்றும்படி தெரிவித்துள்ளன. முதற்கட்டமாக வாரத்துக்கு இரண்டு நாட்கள் இவர்கள் அலுவலகம் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோல், Cognizant நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் முதல் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று தெரிவித்து, அதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறது.
Infosys நிறுவனமும் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அனைத்து பணியாளர்களும் அலுவலகத்துக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது. TCS தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் தகவலில், வீட்டில் இருந்து பணியாற்றினாலும், அடிப்படை பணி இடத்திலிருந்தே தங்கள் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பெருந்தொற்று அச்சம் காரணமாக, வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து பணிபுரியும் Hybrid முறைக்கு அலுவலகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அலுவலகம் சென்று பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்காக ஒருசில தொழில் நிறுவனங்கள் தற்போது ஒவ்வொரு கட்டமாக அலுவகத்துக்கு பணியாளர்களை வரவழைக்க திட்டமிட்டு வருகின்றன.