சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. இந்தியாவில் தட்டுப்பாடு.!?
இந்தோனேசியா சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்து வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெய்க்கு, உள்நாட்டில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக அனைத்து சமையல் எண்ணெய் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதனால் வரும் கடினமான காலங்களில் இந்திய நுகர்வோர் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ அனைத்து சமையல் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை ஏப்ரல் 28 முதல் அடுத்த உத்தரவு வரை நிறுத்தி வைப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய தேசத்தில் சமையல் எண்ணெய்களுக்கான கடுமையான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாமாயில் இறக்குமதியில் இந்தியா தனது 8.3 மில்லியன் டன் இந்தோனேசியாவிலிருந்து பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.