டிராய் மறுப்பு..
இந்தியாவில் செல்போன் சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த, டிராய் என்ற தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது. இந்த நிறுவனம் அண்மையில் பல சிம்கார்டுகளை வைத்திருப்போருக்கு தனிக்கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக அண்மையில் பிரதான ஊடகங்களில் செய்திள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டியுள்ள டிராய், இது அடிப்படை ஆதரமற்ற, பொய்யான தகவல் என்று மறுப்பு தெரிவித்துள்ளது. இது பொதுமக்களை குழப்பும் வேலை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது., சில ஊடக நிறுவனங்களில் இப்படி ஒரு தகவல் வெளியிட்டிருப்பது முற்றிலும் பொய் என்று மறுத்துள்ள டிராய் கடந்த 14 ஆம் தேதி இதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி செல்போன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை முற்றிலும் வேறானது என்றும், டிஐ எனப்படும் தனிப்பட்ட குறியீட்டு எண்கள், ஒவ்வொரு செல்போன் மற்றும் லேண்ட் லைன்களின் தனித்துவமான குறியீடு என்றும்,இந்த குறியீடுகள் 5ஜி நுட்பத்தை நிர்வகிக்க முக்கியமானது என்றும் டிராய் குறிப்பிட்டுள்ளது. தேவையில்லாமல் கிடக்கும் எண்களை பயனுள்ள வகையில் மாற்ற மட்டுமே கேட்டுக்கொண்டதாகவும், அப்படி கூடுதல் பணம் வசூலிக்கும்பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும் டிராய் கூறியுள்ளது. டிராயின் தலையீடு இல்லாமல் நிறுவனங்களே சிறப்பாக நிர்வகித்துக்கொள்ள வேண்டும் என்றும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. பொய்யான தகவல்களை வெளியிட்டதற்காக செய்தி நிறுவனங்களையும் டிராய் கண்டித்துள்ளது.