விமானத்தில் அத்துமீறல்..கடுமையாகும் விதிகள்!!!
விமானங்களில் பயணம் செய்யும் அளவுக்கு வசதி உள்ளோருக்கு பெரும்பாலும் படிப்பறிவும், பண வசதியும் இருக்கும் என்ற நிலை உள்ளது. இந்த சூழலில் அண்மையில் விமானங்களில் அத்துமீறி நடந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இந்தியாவி்ல் மட்டுமல்ல உலகளவில் பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், விமானத்தில் பயணிக்கும் நபர் அத்துமீறும்பட்சத்தில் அவருக்கு என்ன மாதிரியான தண்டனைகள் ,அபராதங்கள் விதிக்கலாம் என்ற நடைமுறை ஏற்கனவே இருக்கிறது. இந்தியாவிற்கு யார் வந்தாலும் இல்லை இந்தியர்களே அத்துமீறலில் ஈடுபட்டாலும் உள்ளூர் விதிகளை மதிக்க வேண்டும் என்றும்,BCAS எனப்படும் பொது சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக விமானங்களில் சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அநாகரீகமாக நடந்துகொள்ளும் பயணிகள் குறித்து தகவல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது என்றும் முதல் தகவல் அறிக்கை நிச்சயம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் சுபிகர் ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் அவசர கால கேட்டை திறக்க முற்படுவோருக்கும் பொருந்தலாம் என்பது கூடுதல் தகவலாகும்.