22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க, இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை டிரம்ப் வலியுறுத்துகிறார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியா மற்றும் சீனா மீது 100% வரை சுங்கவரி விதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாக உள்ள நிலையில், அதனை வாங்குபவர்களில் இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் இந்த நடவடிக்கையை டிரம்ப் முன்மொழிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரம்ப்பின் இந்த கோரிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் தொடர்பான தூதர் டேவிட் ஓ’சல்லிவன் மற்றும் பிற அதிகாரிகளிடம் ஒரு மாநாட்டு அழைப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் போது, அமெரிக்காவும் இதேபோன்று சுங்கவரி விதிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது.


டிரம்ப்பின் இந்த முன்மொழிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அணுகுமுறையில் ஒரு முக்கிய மாற்றத்தை குறிக்கிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை ரஷ்யாவை தனிமைப்படுத்த சுங்கவரிகளை விட பொருளாதார தடைகளையே பெரிதும் நம்பியுள்ளது.

ஜூலை மாதம், இந்தியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி, இந்தியா மீது 25% பரஸ்பர வரியை விதித்த டிரம்ப், பின்னர் அதை 50% ஆக உயர்த்தினார். மறுபுறம், ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடான சீனா மீது அமெரிக்கா இதுவரை கூடுதல் சுங்கவரியை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கோரிக்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒருங்கிணைந்த ஒற்றுமையை வெளிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது.

அதே நேரத்தில், ஐரோப்பா ரஷ்ய எரிசக்தி சார்பை முற்றிலும் துண்டிக்காததையும் டிரம்ப் விமர்சித்துள்ளார். இருப்பினும், அவர் இந்தியாவின் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதில் தான் திறந்த மனதுடன் இருப்பதாக சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார். மோடியுடன் பேச ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *