200மில்லியன் பவுண்டு முதலீடு செய்யும் டிவிஎஸ்…
டிவிஎஸ் நிறுவனம் பிரிட்டனின் பிரபல நிறுவனமான நார்டான் மோட்டர் சைக்கிள் நிறுவனத்தில் 200 மில்லியன் பவுண்டு முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பொருட்கள் உருவாக்கம், ஆராய்ச்சி மற்றும் வசதிகள், உலகத் தரம் வாய்ந்த பொறியியல் அம்சங்கள் ஆகியவற்றிற்காக இந்த முதலீடு செய்யப்பட இருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் நார்டான் நிறுவனம் 6 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. நார்டான் நிறுவனம் இந்தியாவிலும் அதன் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளது. பிரிட்டனை பூர்விகமாக கொண்டிருந்தாலும் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நிறுவனம் தனது கிளையை தொடங்க இருக்கிறது. நார்டான் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது பரிசோதனை நிலையிலேயே இருப்பதாகவும், உலகம் முழுவதும் உள்ள பைக் பிரியர்கள் நார்டான் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் டீலர்கள் வாயிலாக அனைத்து பகுதிகளுக்கும் நார்டான் நிறுவன பைக்குகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.