1லட்சம் பைக்குகளை விற்ற டிவிஎஸ்..
நம்ம ஊரு வண்டி, ராசியான வண்டி என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்ட டிவிஎஸ் எக்ஸ் எல் வண்டி 1லட்சத்துக்கும் அதிகமான வண்டிகளை விற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் 49லட்சம் பைக்குகளை விற்கும் அளவுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் எக்ஸ்எல் வண்டிகள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 1லட்சத்து 22 ஆயிரம் வண்டிகள் விற்கப்பட்டுள்ளன. குறிப்பாக 91 நாட்களில் தினசரி 1348 வண்டிகள் விற்கப்படுகின்றன.
நல்ல செயல்திறன், பெரிய சரக்குகளையும் எளிதாக எடுத்துச்செல்ல முடிவதால் இதனை பலரும் விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக தென்இந்தியா மற்றும் குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த வண்டிக்கு அமோக வரவேற்பு உள்ளது.
5 வகைகளில் இந்த வாகனங்கள் கிடைக்கின்றன. ஆரம்ப விலையாக 44ஆயிரத்து 999 ரூபாயும், அதிகபட்ச விலையாக 60905 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு டிவிஎஸ் வண்டிகள் 5 லட்சத்து 46,584 வண்டிகள்தான் விற்கப்பட்டன. ஆனால் தற்போது 13லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. 2024 கணக்குப்படி டிவிஎஸ் நிறுவனத்தின் வாகனங்கள் 31 லட்சம் விற்கப்பட்டுள்ளன. இதிலும் ஸ்கூட்டர்கள் அதிக வேகமாக விற்கப்படுகின்றன.
மொபெட் வகை வாகனங்கள்தான் இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் மொபெட் வண்டிகளுக்கு 45 வயதாகிறது. 1979 ஆம் ஆண்டு ஓசூரில் தொடங்கப்பட்ட இந்த ஆலையில் அப்போதே டிவிஎஸ் வண்டிகள் 105 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறன் பெற்றதாக வடிவமைக்கப்பட்டது. இத்தகைய வசதிகள் கொண்ட டிவிஎஸ் மொபெட் வண்டிகளில் மின்சார வசதி ஏன் வரவில்லை என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. விரைவில் வரும் என்றும் தகவல் கசிந்திருக்கின்றன