ரஜினி பிறந்தநாளில் டிவிட்டர் புளூ டிக் சேவைகள் துவக்கம்!!!
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள சூழலில் அதில் உள்ள புதிய சேவைகள் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீள நிற டிக் வசதி கொண்டோருக்கு புதிய சலுகைகளை அளிக்கும் முறை திங்கட்கிழமை கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே இந்த சேவைகளை பிரத்யேகமாக அளிக்க முயற்சி செய்த டிவிட்டரின் செயல்பாடுகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய சேவைகள் திங்கட்கிழமை துவங்குகின்றன. கடந்த மாதத்தில் புளூ டிக் வசதியை அறிமுகப்படுத்திய டிவிட்டர் நிறுவனத்தில் சில போலிகள் வலம்வந்ததால் அந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது
ஆப்பிள் நிறுவன போன்களுக்கு மட்டும் 11டாலர் வசூலிக்க டிவிட்டர் திட்டமிட்டுள்ளது. பிற செல்போன்களில் 8 டாலர்கள் வசூலிக்கப்பட உள்ளது. பணம் செலுத்தி சேவைகளை பெறும் நிறுவனங்கள் டிவீட்களை எடிட்செய்யவும், உயர் ரக வீடியோக்களை பதிவு செய்யவும் முடியும் என்று கூறப்படுகிறது. வரும் வாரத்தில் வணிக பயன்பாட்டுக்கு தங்க நிற டிக் வசதியும்,அரசு மற்றும் பிறதுறைகளுக்கு சாம்பல் நிற டிக் வசதியும் கிடைக்க இருக்கிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடக்கும் டிவிட்டர் கணக்குகளை டெலிட் செய்யவும் டிவிட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.