ஒரு வழியாக இணைந்துவிட்ட இரு துருவங்கள்…
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC,HDFCநிறுவனத்துடன் வரும் ஜூலை மாதம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தின் முடிவுகளை வெளியிடும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்டிஎப்சி வங்கியின் மூத்த நிதி அதிகாரி ஸ்ரீனிவாசன் வைத்தியநாதன், இணைப்புகுறித்து பேசினார். கிட்டத்தட்ட இரு நிறுவனங்களையும் இணைக்கும் பணிகள் நிறைவுற்று இறுதி ஒப்புதல் மட்டுமே தரப்படவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வங்கிகள் மற்றும் காப்பீடுகள் விவகாரங்களுக்கு அனுமதி அளிக்கும் மத்திய வங்கி மற்றும் செபியிடம் ஒப்புதலுக்காக இந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. எச்டிஎப்சியும் அதன் வங்கியும் ஒன்றாக இணைக்கும் பணிகள் கடந்தாண்டு ஏப்ரலில் செய்யப்பட்டன. இறுதிகட்ட ஒப்புதல் வரும் ஜூன் அல்லது ஜூலையில் முடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இதே தகவலை ரிசர்வ் வங்கி மற்றும் செபி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.