அடேயப்பா!!!! கிரிப்டோவில் இவ்வளவு பிரச்சனையா? ..
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ள பண மதிப்பு 953 கோடியே 70 லட்சம் ரூபாயாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். திமுக எம்பி வேலுச்சாமி இது தொடர்பான கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். இதற்கு நிதியமைச்சர் பதில் அளித்துள்ளார். அதில் fatf அமைப்பு பண மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தல் ஆகியவற்றில் சட்டத்திருத்தம் கோரியுள்ளது என்றார். தொடர்ந்து மெய்நிகர் சொத்துகளில் குற்றங்கள் அதிகம் நடப்பதாக கூறியுள்ள திமுக எம்பி, இதனை கண்காணிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர், மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் கிரிப்டோ கரன்சியில் எச்சரிக்கை தேவை என்று பலமுறை கூறியுள்ளதாக தெரிவித்தார். 2013ம் ஆண்டில் இருந்து இதுவரை மெய்நிகர் பணம் வைத்திருப்பது பொருளாதார,நிதி,செயல்பாட்டு அளவிலும்,பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகளை கொண்டிருககும் என்று கூறியுள்ளார். சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க fatf பல்வேறு மாற்றங்களை செய்து வருவதாகவும்,டிஜிட்டல் மெய்நிகர் பணம் வைத்தருந்தாலும் அவர்களிடமும் KYC பெற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ம், 6 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் விளக்கம் கூறியுள்ளார். அமலாக்கத்துறை சில வழக்குகளை தனி கவனம் வைத்து விசாரணை நடத்துவதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் ஆகிய பிரிவுகளில் விசாரணை நடத்துவதாகவும் கிரிப்டோ கரன்சி குறித்து பேசியுள்ளார்.