பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்டுகள் அட்வைசரி..
பிரிட்டனில் அவசர நிலை ஏற்பட்டால் 3 நாட்களுக்கு தேவையான அவசர கால உணவுகளை மக்கள் தாயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் பொருட்களை வாங்கிச்சென்றனர். ஒரே நேரத்தில் அதிகம் பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டாம் என்றும் சூப்பர் மார்க்கெட் வைத்திருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு நபருக்கு தேவையான தண்ணீர், பவர் பேங்க், உணவு உள்ளிட்ட பொருட்களை சரியான அளவில் எடுத்து வைத்துக்கொள்வது சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்தையும் சென்று வாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் விபத்துகள் ஏற்படலாம் என்பதற்காக எப்போதும் ஒரு அவசர நிலையில் வைத்திருக்க நேரிடலாம் என்பதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால நிலை மாற்றத்துக்கு தகுந்தபடி தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம் என்பதால் ஒரு பதற்றத்தில் மக்கள் அதிகம் வாங்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தினர் போதிய கையிருப்பை வைத்துக்கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரிபேர் என்ற இணையத்தை அரசு வெளியிட்டதை அடுத்து ஒரு வித பய அனுபவத்தில் மக்கள் அதிகம் பேர் இந்த பொருட்களை வாங்கிச்செல்கின்றனராம்.