உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. பொருட்கள் விலை உயரும் அபாயம்..!?
உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு, சீனாவில் புதிதாக பரவி வரும் தொற்றுநோய் போன்ற கவலைகளுக்கு மத்தியில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 1% க்கும் அதிகமாக உயர்ந்தது.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ஒரு நாளைக்கு 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) கூறியுள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (Opec), இந்த ஆண்டு அதன் ஏற்றுமதியை ஒரு நாளைக்கு 99.5 மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்துள்ளது.
காலை 0900 மணிக்கு, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு அதன் முந்தைய முடிவிலிருந்து 1.15% அதிகரித்து $99.15க்கு வர்த்தகமானது,.
இதுவரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஜெட் எரிபொருள் விலையை 18% வரை உயர்த்தியுள்ளன. முதன்முறையாக, விமான எரிபொருள் விலை இப்போது கிலோ லிட்டருக்கு ₹1 லட்சத்தை தாண்டியுள்ளது.