ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை.. குறையும் கச்சா எண்ணெய் விலை..!!
உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை காலை குறைந்து காணப்பட்டது. ஒரு பாரல் ப்ரெண்ட் எண்ணெய் டாலருக்கு 102 ரூபாயாக காணப்பட்டது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சீனாவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஓமன், துபாய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஆகிய எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு இதுவரை நுகர்வோருக்கு மாற்றப்படவில்லை, நான்கு மாதங்களுக்கும் மேலாக சில்லறை எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விரைவில் விலையை உயர்த்தக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மோர்கன் ஸ்டான்லி, அதன் பணவீக்க மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) குறித்த கணிப்பைக் குறைத்துள்ளது..
உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததன் மத்தியில், பிப்ரவரியில் மொத்த பணவீக்கமும் 11-வது மாதமாக இரட்டை இலக்கத்தில் நீடித்தது.
உக்ரைன் ரஷ்யா பேச்சுவார்த்தை கச்சா எண்ணெய் விலை குறைகிறது.