Ukraine Russia War.. – உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய் விலை..!!
உலகளவில், திங்கட்கிழமையன்று(07.03.2022) கச்சா எண்ணெய்யின் விலை உச்சத்தை எட்டியது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, திங்களன்று உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உச்சத்தை எட்டியது.
சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான ரஷ்யா உள்ளது. இங்கிருந்து நாள்தோறும், 4 மில்லியன் முதல் 5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்வதேச எரிசக்தி ஏஜென்சியின் (IEA) மார்ச் 4-ம் தேதியன்று, அதன் உறுப்பு நாடுகள் 61.7 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிடும் என்று அறிவித்தது. ஆனால் விலையைக் குறைக்க அது தவறி அவிட்டது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மார்ச் 4 –ம் தேதி, ஒரு பீப்பாய்க்கு 111.61 டாலராகஇருந்தது. திங்கட்கிழமை (மார்ச் 7-ம் தேதி)ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 139.13 டாலரைத் தொட்டது.
இதனிடையே, 3 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மார்ச் 7-ம் தேதி முடிவடைவதால், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் உயரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.