ஏற்றுமதி பாதிக்கும்.. – பொருளாதார வல்லுநர்கள் கருத்து..!!
ரஷ்யா, உக்ரைன் போர் முடிவுற்றாலும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி பல மாதங்களுக்கு பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள் ளரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது.
இந்நிலையில், போர் முடிவுக்கு வந்தாலும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி பல மாதங்களுக்கு தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரங்களுக்கான முக்கிய சப்ளையராகவும் ரஷ்யா உள்ளது. இதனால் விவசாயிகள் காபி முதல் அரிசி மற்றும் சோயாபீன்ஸ் வரை அனைத்தையும் விளைவிக்க கடினமாக போராட வேண்டியிருக்கும்.
உலகின் மிகப்பெரிய உணவு இறக்குமதியாளர்களில் ஒன்றான சீனாவில், ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து குறைவான பயிர் ஏற்றுமதி ஆகின்றன. எகிப்தில், நான்கு தசாப்தங்களில் முதல் முறையாக மானிய விலையில் வழங்கப்படும் ரொட்டித் துண்டுகளின் விலைகள் உயரக்கூடும் என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். உக்ரைனிலேயே, சில முக்கிய நகரங்களில் உணவு பற்றாக்குறை உள்ளது.
ரஷ்யாவின் கோதுமை நேரடியாக தடையின் கீழ் வரவில்லை என்றாலும், அந்நாட்டின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கருங்கடலில் இராணுவ நடவடிக்கை காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளில் கோதுமை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்புப் பருவத்தில் ஏற்றுமதி 7 மில்லியன் டன்களைத் தாண்டி சாதனை படைக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.