உக்ரைன் மீது போர் – ரஷ்யாவின் தரத்தை குறைத்த மூடிஸ்.. ஃபிட்ச்..!!
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால், ரஷ்ய நாட்டின் மீதான தரம் குறைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்ய வங்கிகள் மீது தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரேட்டிங் ஏஜென்சிகளான ஃபிட்ச் மற்றும் மூடிஸ் ஆகியவை ரஷ்யாவின் மதிப்பை 6 புள்ளிகள் குறைத்துள்ளன. இதனால் ரஷ்யாவில் முதலீடு செய்யும் அபாயங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் S&P ரஷ்யாவின் மதிப்பைக் குறைத்தது. ஃபிட்ச் ரஷ்யாவை BBB-யிஇலிருந்து B என்று தரமிறக்கி அறிவித்தது. ரஷ்யாவின் மதிப்பீடுகளை ரேட்டிங் வாட்ச் நெகட்டிவ் பட்டியலில் வைத்தது. கடந்த வாரம் மூடிஸ், ரஷ்யாவின் மதிப்பீட்டை Baa3-லிருந்து B3-க்கு ஆறு புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
இதனால் சர்வதேச தடைகளின் தீவிரம் மேக்ரோ-நிதி ஸ்திரத்தன்மை அபாயங்களை அதிகரித்துள்ளது என்று ஃபிட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1997-ஆம் ஆண்டு தென் கொரியா மட்டுமே 6 புள்ளிகள் குறைக்கப்பட்டது. தற்போது ரஷ்யாவிற்கு 6 புள்ளிகளைக் குறைத்துள்ளது.