அல்ட்ராடெக் நிறுவன அதிரடி..
சிமென்ட் நிறுவனங்களில் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது அல்ட்ரா டெக் நிறுவனம் , இந்த நிறுவனம் அண்மையில் பெரிய அப்டேட் ஒன்றை அளித்திருக்கிறது. அதில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 23 விழுக்காடு பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனுடன் நெருக்கமான தொடர்புள்ள எல் அண்ட் டி நிறுவனம், பிற நிறுவனங்களின் புரமோட்டர் உள்ளிட்ட துறைகளுடன் சேர்த்து 28.42% பங்குகளை வைத்துள்ளது. சிமெண்ட் துறையில் ஆதிக்கம் செலுத்த அதானி குழுமம் முயற்சித்து வரும் நிலையில், அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. மிகவும் பிரபலமான இண்டியா சிமென்ட்சின் பங்குகளை வாங்கியுள்ளது, எல்அண்ட்டி நிறுவனத்துக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. எல்அண்ட் டி நிறுவன பங்குகள் ஆதிக்கம் செலுத்தினாலும் இண்டியா சிமென்ட்ஸ் சீனிவாசனுக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் பென்னா சிமென்ட்ஸ் நிறுவனத்தை 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அதானி குழுமம் தெரிவித்தது. இந்நிலையில் இந்தியா சிமென்ட்ஸின் உற்பத்தி திறன் என்பது ஆண்டுக்கு 15.5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்டதாகும். ஆதித்யா பிர்லா குழுமம் ஏற்கனவே பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக திகழ்கிறது. கடந்த 2004-ல் எல்அண்ட் டி நிறுவனத்திடம் இருந்து அல்ட்ராடெக் நிறுவனம் பெரும் பங்குகளை வாங்கியிருந்தது. சிமென்ட் துறைக்கு வலுவான எதிர்காலம் உள்ள நிலையில் பெரிய நிறுவனங்களான அதானி, ஜேஎஸ்டபிள்யு உள்ளிட்ட நிறுவனங்கள் சிமெண்ட் ஆலைகளை வாங்கி குவித்து வருகின்றன. இந்தியாசிமென்ட்ஸ் நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளாக டி மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தமானியிடம்தான் இருக்கிறது. அதாவது 20 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள நிலையில் அவர்தான் அல்ட்ரா டெக்கிடம் விற்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இண்டியா சிமென்ட்ஸ் நிறுவன தலைமைக்கு அதிகார சிக்கல்கள் எழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.