2022-23-ம் பட்ஜெட் – பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிப்பு..!!
2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்:
மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்ல விரும்பும் இந்தியர்களுக்காக நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் நடைமுறைப்படுத்தப்படும்.
அனிமேஷன், கிராஃபிக்ஸ் துறைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம் மற்றும் ஊட்டச்சத்து 2.0 ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். நிலசீர்த்திருத்தத்தின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் ஒரு நாடு, ஒரு பதிவு திட்டம் கொண்டு வரப்படும்.
வரும் 2025-ம் ஆண்டுக்குள், இ சேவை மூலம், கண்ணாடி ஒளியிழை வாயிலாக அனைத்து கிராமங்களையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2030-ம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் விடப்படும்.
ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் கரன்சியை நேரடியாக அறிமுகம் செய்யவுள்ளதாகவும், பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மையங்கள் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தும் விதமாக, ராணுவத் தளவாடங்களில் 68% உள்நாட்டு உற்பத்தியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு 3 ஆண்டுகள் வட்டியில்லாத கடன் வழங்குவதற்காக, ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1.50 லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்படும். தபால் நிலையங்கள் அனைத்தும் வங்கிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மனரீதியான சிகிச்சை அளிப்பதற்காக மையங்கள் உருவாக்கப்படும். நிலங்களை அளவிடுவதற்கும், விளைச்சலை கண்காணிக்கவும் ட்ரோன் திட்ம் செயல்படுத்தப்படும். ஆன்லைன் வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1.40.986 கோடி ரூபாய் இருந்ததாகவும், ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.