தனித்துவமான தங்கப்பத்திரம் தந்த பலன்கள்..
8 ஆண்டுகளுக்கு முன்பு தங்கக்கடன் பத்திரங்கள் அறிமுகான போது தயங்காமல் சரியான முடிவை எடுத்தவர்களுக்கு காத்திருந்தது மகழ்ச்சி. ஆமாம் வரிச்சலுகையுடன் 128%ரிட்டர்ன்ஸை தங்கப்பத்திரங்கள் திருப்பி அளித்திருக்கின்றன. இதுவும் போக இரண்டரை விழுக்காடு வட்டியும் இதில் இருந்து வருகிறது. இது நகைக்கடைக்காரர்களுக்கும் இந்த காலகட்டத்தில் கொள்ளை லாபமாகவும் அமைந்திருக்கிறது. 801 விழுக்காடு அதிக ரிட்டர்ன்ஸை தந்திருக்கிறது. டாடாவின் நிறுவனங்களில் பிரதானமான லாபம் தரும் நிறுவனங்களில் ஒன்றாக டைட்டன் நறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனமும் தங்கள் மொத்த விற்பனயைில் அமோக வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. மக்களின் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதும் டாடா நிறுவனத்தின் விற்பனையில் மாற்றம் சேர்ந்துள்ளன. 2015-ல் வெறும் 33,731 கோடி ரூபாயாக இருந்த சந்தை மூலதன அளவு தற்போது 3லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு கிராம் 2684 ரூபாய்க்கு தங்கப்பத்திரம் முதலீடு செய்திருப்போருக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். பங்குச்சந்தையில் சிலர் போட்ட பணமும்,தங்கமும் திவாலான கதைகளும் மறுப்பதற்கு இல்லை. இதனால் தங்கத்தை சாப்பாட்டுத்தட்டில் உள்ள ஊறுகாய் போலவே முதலீட்டாளர்கள் கருதி வருகின்றனர். தங்க நகை விற்பனை செய்யும் டைட்டன் நிறுவனம் மட்டும்தான் கடந்த 5 ஆண்டுகளில் 34% லாபத்தை பதிவு செய்திருக்கிறது. 61200 கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்கப்பட்டுள்ளன. டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அனைத்து துறைகளிலும் டைட்டன் நிறுவனத்தின் வருவாய் பலமடங்கு உயர்ந்திருக்கிறதாம். உலகம் முழுதும் விலைவாசி உயர்வு தவிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கூட டைட்டன் நிறுவனத்தில் முதலீடு செய்தவங்களுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.