பெரு நாட்டில் யுபிஐ .
தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் சர்வதேச பிரிவுடன் பெரு நாடு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள யுபிஐ வசதி போலவே பெரு நாட்டின் மத்திய வங்கியும் புதிய வசதியை செய்ய இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இதேபோல் நமீபியா மத்திய வங்கியுடன் ஒப்பந்தம் ஒன்றையும் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ளதைப்போலவே பெரு நாட்டிலும் யுபிஐ வசதி விரைவில் அறிமுகப்படுத்த பெரு மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. தற்போது வரை யுபிஐ பேமண்ட் வசதிகளை இலங்கை, மொரீசியஸ், பிரான்ஸ், அரபு அமீரகம், சிங்கப்பூர், பூடான், நேபாள் ஆகிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு விரிவாக்கத்தை யுபிஐ மற்றும் பே நவ் அமைப்புகள் இணைந்து இயங்கி வருகின்றன. கடந்த ஜனவரி 2024 முதல் இருநாடுகளுக்கும் இடையே யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை நடந்து வருகிறது.