நெறய பேருக்கு வேலை ரெடி .. சென்னையில் Zoom அலுவலகம்….!!
சென்னையில் திறக்கப்படவுள்ள Zoom செயலி தகவல் தொழில்நுட்ப மையத்தில் விரைவில் ஊழியர்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று உலக மக்களை புரட்டிப் போட்ட காலத்தில், அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான செயலியாக Zoom கருதப்படுகிறது.
இந்த செயலியின் முக்கியத்துவத்தை அறிந்து சென்னையில் Zoom செயலி தகவல் தொழில்நுட்ப மையம் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மும்பை, பெங்களுரு, ஐதராபாத் ஆகிய மிகப்பெரிய நகரங்களில் ஜும் செயலி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது ஜும் விடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்களின் தொழில்நுட்ப கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்யும் விதமாக சென்னையில், புதிய டெக் சென்டரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஜும் விடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் குளோபல் இஞ்சினியரிங் பிரிவு சென்னை அலுவலகத்தை நிர்வாகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்துக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் பணிகள் விரைவில் நடைபெறும் என்று ஜும் நிறுவனத்தின் புராடக்ட், இஞ்சினியரிங்க பிரிவின் தலைவர் வேல்சாமி சங்கர்லிங்கம் கூறியுள்ளார்.
சென்னையில் திறக்கப்டவுள்ள அலுவலகம், அந்நிறுவனத்தின் இன்னோவேஷன் பிரிவில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், கான்டெக்ட் சென்டர் உள்ளிட்ட சேவைகளின் ஆராய்ச்சி, வளர்ச்சிக்கான புதிய தளமாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னை அலுவலகம் மும்பை, ஐதராபாத் நகரங்களில் உள்ள டேட்டா சென்டர்களுக்கும், பெங்களுருவில் உள்ள தொழில்நுட்ப மையத்துக்கும் உதவியாக செயல்படும் என்றும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.