அமெரிக்க அரசாங்கமே ஷட்டவுன்…?
அமெரிக்க அரசாங்கமே திவாலாகும் நிலைக்கு கடந்தவாரம் நடந்த காரசாரமான வாக்குவாதம் சென்றது. அரசாங்கம் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்தான அந்த விவாதத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும்வாக்குவாதம் எழுந்தது. எதாவது ஒரு துறைக்கு நிதி ஒதுக்க வேண்டுமெனில் அங்குள்ள காங்கிரஸ்மென்களின் ஒப்புதல் அவசியம்.அப்படி காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லைஎனில் பெடரல் முகமை அதிகாரிகள் தேவையில்லாத பணிகள் அணைத்தையும் நிறுத்திவிடுவார்கள்.இதுவே அரசாங்க்தின் ஷட் டவுன் என்று வர்ணிக்கப்படுகிறது. மொத்தம் 12 மசோதாக்களில் சிலவற்றுக்கு மட்டும் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தால் எவை ஒப்புதல் அளிக்கப்படவில்லையோ அவை இயங்காது. இதற்கு பகுதி அளவு ஷட் டவுன் என்று பெயராகும். கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்க அரசாங்கங்கள் 10முறைக்கும் மேல் ஷட்டவுன் ஆகியுள்ளன. அப்படி ஷட் டவுன் ஆனால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
அடிப்படை செயல்கள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும்.பொதுப்பாதுகாப்பு,ராணுவம் உள்ளிட்டவற்றில் எந்த தடையும் இருக்காது.ஆனால் பெரிய முடிவுகளை எடுக்க முடியாதபடிக்கு அரசாங்கத்தை அனைத்து எம்பிகளும் முடக்கிவிடுவார்கள்.பட்ஜெட் ஒதுக்கீடு என்பது தடைபட்டுவிடும்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 0.1%வரை மட்டுமே வளரும். அந்நாட்டில் அதீத கடன் இருந்து வரும் சூழலில் அமெரிக்காவில் ஷட் டவுன் வருவதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பதே தற்போதைய கேள்விக்குறியாக இருக்கிறது.