22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

Nvidia-வில் பங்கு வாங்கும் திட்டம் இல்லை – டிரம்ப் நிர்வாகம்

நிவீடியாவில் பங்கு வாங்கும் திட்டம் இல்லை – டிரம்ப் நிர்வாகம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், சமீபத்தில் இன்டெல் நிறுவனத்தில் 10% பங்கை வாங்கியிருந்தது. இதையடுத்து, “நிவீடியாவில் பங்கு வாங்குவார்களா?” என்ற கேள்வி எழுந்தது.


ஆனால், அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

மரியாவுடன் ஃபாக்ஸ் பிசினஸ் மார்னிங்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நிவீடியாவுக்கு நிதி உதவி தேவையில்லை. ஆகையால் பங்கு வாங்குவது இப்போதைக்கு தேவையில்லை” என்றார்.

அதேசமயம், கப்பல் கட்டுமானம் போன்ற முக்கிய துறைகளில் அரசு முதலீடு செய்யக்கூடும் எனவும் சுட்டிக்காட்டினார்.


அவர் மேலும், பாதுகாப்புத் துறையிலும் அரசின் பங்குதான் தேவையா என்பதை, அந்த நிறுவனங்கள் அமெரிக்க இராணுவத்துக்குத் தேவையான உபகரணங்களை நேரத்திற்கு வழங்குகிறார்களா என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றார்.


இன்டெல்-ல் 10% பங்கு வாங்கிய டிரம்ப்
ஆகஸ்ட் 22 அன்று, அமெரிக்க அரசு இன்டெல் நிறுவனத்தில் சுமார் 10% பங்கை $8.9 பில்லியன் செலவில் பெற்றது.

இதற்கு கூடுதலாக சிப்ஸ் ஆக்ட் வாயிலாக முன்னதாக வழங்கப்பட்ட $2.2 பில்லியனை சேர்த்து, மொத்த முதலீடு $11.1 பில்லியனாகிறது. இதன் மூலம் 433.3 மில்லியன் பங்குகள் அமெரிக்க அரசுக்கு கிடைத்தன.


இந்த ஒப்பந்தம், இன்டெல் நிறுவனம் அண்மையில் சந்தித்த சிரமங்களை சமாளிக்கவும், அமெரிக்காவில் உள்ளூர் சிப் உற்பத்தியை ஊக்குவிக்கவும் செய்யப்பட்டது.

டிரம்ப், “இது அமெரிக்காவுக்கும் இன்டெல்-க்கும் மிகச் சிறந்த ஒப்பந்தம். உலகத் தர சிப் உற்பத்தி எங்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு அடிப்படை” என்று கூறினார்.


சந்தை நிலைமை
பெசென்ட் அளித்த கருத்துக்குப் பிறகு நிவீடியா பங்கு விலை 0.5% குறைந்தது. முதலீட்டாளர்கள் அதன் காலாண்டு முடிவுகளை காத்திருந்தனர். அதே சமயம், S&P 500 குறியீடு 0.1% சரிந்தது; நாஸ்டாக் 100 குறியீடும் 0.1% வீழ்ச்சி கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *