வடிவேலு ஸ்டைலில் கடுப்பான இலங்கை அதிபர்!!!
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, மெல்ல மெல்ல இப்போது தான் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருகிறது. இந்த சூழலில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை செய்ய வேண்டியதில்லை ஏனெனில் இலங்கையில் பொருளாதாரம் என்ற ஒன்றே இல்லை என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். அந்நிய நாட்டு பண கையிருக்கு சுத்தமாக இல்லாமல் தவிக்கும் இலங்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்து இப்படி ஒரு பொருளாதார சிக்கலை சந்தித்தே இல்லை இந்த சூழலில் புதிய பொருளாதார கொள்கையை ரணில் வகுத்து வருகிறார். புதிய பொருளாதார கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளதாக கூறியுள்ளார். நிதி நிலைமையை சரிசெய்ய சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கை கோரியுள்ளது அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து பெரிய தொகையை கடனாக இலங்கை கோரியுள்ளது. இதேபோல் ஏற்கனவே கடன் அளித்த சீனாவிடமும் மீண்டும் கடன் கேட்டு இலங்கை நின்றுள்ளது கடன் வாங்குவது தொடர்பாக நிபுணர்களை இலங்கை அரசு நியமித்துள்ளது.
ஏற்கனவே 51 பில்லியன் டாலர் கடனை இலங்கை திருப்பி அளிக்க உள்ளது. இதனை 2027ம் ஆண்டுக்குள் 28 பில்லியன் அமெரிக்க டாலரை திருப்பி செலுத்த இருக்கிறது. இலங்கையில் 2 கோடியே 20 லட்சம் மக்கள் உள்ளனர்.
போதுமான பணம் இல்லாததால், எரிபொருள், உரம் மற்றும் மருந்து இல்லாமல் தவித்த மக்கள் இலங்கை வரலாற்றிலேயே மோசமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.