22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டாலர் மதிப்பு சரிவு..

அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவல் அறிவித்த வட்டி விகிதம் குறித்த அறிவிப்பால் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவல் வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்பைப் பற்றி பேசியதால், அமெரிக்க டாலர் மதிப்பு திங்கட்கிழமை சற்று உயர்ந்தாலும், அதன் வீழ்ச்சியிலிருந்து மீள முடியாமல் தடுமாறி வருகிறது.


ஐரோப்பிய யூரோ, வெள்ளிக்கிழமை எட்டிய $1.174225 என்ற நான்கு வார உச்சத்திற்கு அருகில் $1.1701 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. அதேபோல், பிரிட்டிஷ் பவுண்ட், சுவிஸ் பிராங்க் ஆகியவையும் சுமார் 0.1% சரிந்தன.


வெள்ளிக்கிழமை ஜாக்சன் ஹோலில் நடந்த கூட்டத்தில் பேசிய பாவல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படும் அபாயங்கள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.

பணவீக்கம் ஒரு அச்சுறுத்தலாக இருந்தாலும், அடுத்த மாதம் நடைபெறும் மத்திய வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.


பாவெலின் கருத்துக்களுக்குப் பிறகு, பார்க்லேஸ், பிஎன்பி பரிபாஸ், டியூட்ச் பேங்க் போன்ற முக்கிய நிதி நிறுவனங்கள், செப்டம்பர் மாதம் வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கின்றன.


சிஎம்இ-யின் ஃபெட்வாட்ச் கருவியின்படி (fed watch), செப்டம்பர் 17 அன்று வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்பு 87% ஆக உயர்ந்துள்ளது. இது பாவலின் பேச்சுக்கு முன்பு சுமார் 70% ஆக இருந்தது. பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவுகளைத் தவிர, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபெடரல் அதிகாரிகளைத் தாக்கிப் பேசுவதும் டாலர் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது மத்திய வங்கியின் சுதந்திரம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. டிரம்ப், ஃபெடரல் ஆளுநர் லிசா குக் மீது புகார் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, டாலரின் பலவீனம் காரணமாக சீன யுவான் ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. ஜப்பானிய யென் மதிப்பு, வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்புகளால், டாலருக்கு எதிராக யென் மதிப்பு உயர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *