Display, Semi Conductor Chip தயாரிக்க திட்டம் – வேதாந்தா குழுமம் அறிவிப்பு..!!
Display மற்றும் Semi Conductor Sip-களை தயாரிப்பதற்காக, 15 பில்லியன் டாலரை முதலீடு செய்ய போவதாக வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.
PLI திட்டத்துக்கு அனுமதி:
அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
Hon Hai, அதன் துணை நிறுவனங்களான Foxconn உட்பட, மின்னணு உற்பத்தி சேவைகள் (EMS) துறையில் 40 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
வேதாந்தா, ஃபாக்ஸ்கான் ஒப்பந்தம்:
கடந்த திங்களன்று இரு நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வேதாந்தா கூட்டு நிறுவனத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும், அதே நேரத்தில் Foxcon சிறுபான்மை பங்குதாரராக இருக்கும். வேதாந்தாவின் அனில் அகர்வால் கூட்டு நிறுவனத் தலைவராக இருப்பார்.
எஃப்ஐஎச் மொபைல்ஸின் துணை நிறுவனமான பாரத் எஃப்ஐஎச் லிமிடெட் மற்றும் ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப் நிறுவனமானது, இந்தியாவில் ரூ. 5,000 கோடி ஆரம்ப பொதுப் பங்களிப்புக்கான வரைவு ஆவணங்களை சமீபத்தில் தாக்கல் செய்தது.