அரசியல் கட்சிகளுக்கு 200 கோடி தரும் வேதாந்தா..
வேதாந்தா குழுமம், 200 கோடி ரூபாய் நிதியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அளிக்க அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ஒப்புதல் அளித்துள்ளது. வேதாந்தா நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக கடந்தாண்டு ஜூன் மாதத்தில் வேதாந்தா குழுமம் பல்வேறு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இது தொடர்பான தீர்மான நகல் அண்மையில் வெளியாகியிருக்கிறது.
தேர்தல் அறக்கட்டளை அல்லது தேர்தல் பத்திரங்கள் வாயிலாக இந்த தொகை அளிக்கப்பட இருக்கிறது. எந்த கட்சிக்கு எவ்வளவு ரூபாய் பணம் தரவேண்டும் என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் வேதாந்தா நிறுவனம் முடிவெடுக்க இருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலுக்கு முன்பு தேர்தல் கடன் பத்திரங்களை வாங்க வேதாந்தா கடந்த நவம்பர் 4 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
1970களில் பழைய பொருட்கள் விற்பனையில் வணிகத்தை அனில் அகர்வால் தொடங்கினார். தற்போது அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும் 96554 கோடி ரூபாயாக இருக்கிறது. தற்போது அந்நிறுவனம் தனது செயல்பாடுகளை அலுமினியம்,எண்ணெய், ஸ்டீல், ஃபெரஸ் மற்றும் ஆற்றல் உற்பத்தி ஆகிய 5 பிரிவுகளாக பிரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு அரசியல் கட்சியினருக்கு 457 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பத்திரமாக வேதாந்தா குழுமம் அளித்திருக்கிறது. அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும் தேர்தல் நன்கொடைக்கு பதிலாக தேர்தல் பத்திரங்கள் அளிக்கும் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே பெற இயலும். இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் 2018 முதல் 2022 வரை 27 கட்டங்களாக 13,791 கோடி ரூபாய் நிதி பல்வேறு அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பத்திரங்களின் காலக்கெடு குறித்து 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உச்சநீதிமன்றத்தில் விசாரணையை தொடங்கியிருக்கிறது.
……………………….