செப்டம்பரில் காய்கனி விலை குறையுதாம்..!!!
இந்தியாவில் காய்கனி விலை குறையத் தொடங்கியுள்ளதாகவும்,செப்டம்பரில் இருந்து கணிசமாக குறையும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.கடந்த சில வாரங்களாக காய்கனி விலை அதிகரித்ததன் காரணமாக ஜூலை மாத பணவீக்கம் என்பது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக 7.44%ஆக உயர்ந்தது. உலகளவில் பல்வேறு பிரச்னைகள் இருந்த போதிலும் உணவு தானியங்கள், பருப்பு வகைகளின் விலையும் குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். விலைவாசியை கட்டுப்படுத்த பல்வேறு முடிவுகளை நிதி கொள்கை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உறுதியான முடிவை எடுக்கத் தேவை இருப்பதாகவும் தாஸ் தெரிவித்தார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் பணவீக்கத்தை அதிகரிக்கும் பல்வேறு உலகளாவிய நிகழ்வுகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.இதனை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு மேமாதம் முதல் இப்போது வரை 250 அடிப்படை புள்ளிகளை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியிருக்கிறது.நிலையான சுயசார்பு வளர்ச்சிக்கு நிலையான விலைவிதிப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.2023-24 நிதியாண்டில் வளர்ச்சிக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இருப்பதாக கூறினார். இந்தியாவில் வெளிநாட்டு பண கையிருப்புக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை என்று கூறியுள்ள சக்திகாந்ததாஸ்,வெளிநாட்டு பண கையிருப்பை அதிகரிக்க போதுமான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.