வெரிகுட்… இந்தாங்க 500 கோடி…
இந்தியாவில் மின்சார பைக் விற்பனை நிறுவனங்கள் அண்மையில் நடத்திய பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது பைக் வாங்கினால் கூடவே அளிக்க வேண்டிய சார்ஜருக்கும் சேர்த்து இந்தியாவின் பிரபல நிறுவனங்கள் பில்லை போட்டது பெரிய சர்ச்சையானது. இதனையடுத்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பத் தர நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியது.முழு தொகையும் திரும்பத் தரும்வரையில் 800 கோடி ரூபாய் மானியத்தை நிறுத்துவதாகவும் அரசு அதிகாரிகள் நிறுவனங்களை எச்சரித்தனர். இதனையடுத்து பணத்தை திரும்பத் தரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இந்த சூழலில் ஃபேம் என்ற அமைப்பின் மூலம்தான் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் சார்ஜருக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டு பணத்தை அளித்ததால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் 500 கோடி ரூபாய் மானியத்தை அளிக்க முன்வந்துள்ளனர். இதில் ஓலா நிறுவனத்துக்குத்தான் 370 கோடி ரூபாய் கிடைக்க இருக்கிறது.இதற்கு அடுத்த இடத்தில் ஏத்தர் நிறுவணத்துக்கு 275 கோடி ரூபாயும்,டிவிஎஸ் நிறுவனத்துக்கு 150 கோடி,ஹிரோவுக்கு 28 முதல் 30 கோடி ரூபாய் கிடைக்க இருக்கிறது. இந்த தொகைகள் ஏற்கனவே அறிவித்த மானியத்துடன் சேரும் என்பதால் புதிய 500கோடி ரூபாயை தாண்டுகிறது. சார்ஜருக்கு ஓலா நிறுவனம் 130 கோடி ரூபாயும்,ஏத்தர் தனது வாடிக்கையாளர்களுக்கு 140 கோடி ரூபாயும் திரும்பத் தந்துகொண்டிருக்கிறது. உள்ளூர் விதிகளை பின்பற்றவில்லை என்று ஹீரோ மற்றும் க்கினாவா நிறுவங்கள் மீது புகார் எழுந்தது.இதையடுத்து அந்த இரண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் மீட்கபபட்டது.ஆனால் தங்கள் நிறுவனதுக்கு இழப்புகள் அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனங்கள் புலம்புகின்றனர்.