நகரங்களைவிட கிராமங்கள் அசுரவளர்ச்சி பெறுமாம்..
இந்தியாவில் ஏழைகள் அதிகம் இருக்கும் இடமாக கிராமங்களை பல ஆண்டுகளாக சினிமாவிலும்,கதைகளிலும் சித்தரித்து வருகின்றனர். இனி இந்த சூழல் மாறும் என்று ருசிகர ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. ஓராண்டில் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்கு அதிகம் சம்பாதிப்பவர்களை சூப்பர் ரிச் குடும்பங்களாக அந்த ஆய்வறிக்கை வகைப்படுத்துகிறது.
இவ்வளவு சம்பாதிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அண்மையில் அதிகரித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர் பொருளாதாரம் தொடர்பான மக்கள் ஆராய்ச்சி நிறுவன அறிக்கையான பிரைஸில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நகரங்களில் சம்பாதிக்கும் குடும்பங்களின் விகிதம் என்பது 10.6%ஆக உள்ளது. இதே எண்ணிக்கை கிராமங்களில் 14.2%ஆக உள்ளது. 25 மாநிலங்களில் இது தொடர்பாக 40 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. 2031-ல் கிராமபுறங்களில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்கிறது அந்த புள்ளி விவரம். வணிகம் சார்ந்த விவசாயம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாகவும்,தொழில்முனைவோரின் தேர்வு நகரங்களைவிட கிராமத்தை மையப்படுத்தியே இருப்பதாகவும், பலருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வறிக்கையை தயாரித்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் பல நாடுகளிலும் இருந்து வரும் முதலீட்டாளர்களின் முயற்சிகளால் ஏராளமான தொழில்வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதாக கூறும் நிபுணர்கள், 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் மட்டும் நாள்தோறும் 70 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினரின் வருவாய் என்ற பிரவில் 43 கோடி பேர் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆண்டு வருமானம் 6 முதல் 36,000 டாலர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2031-ல் 71 கோடியே 50 லட்சமாகிவிடும் என்கிறது அந்த ஆய்வறிக்கை. 2031ஆம் ஆண்டில் வறுமையின் பிடியில் இருப்போரின் அளவு என்பது தற்போது உள்ளதைவிடவும் பாதியாககுறைந்து 7 கோடியே 90 லட்சமாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.