கடனில் வோடாஃபோன் ஐடியா – தாய் நிறுவனம் நிதியுதவி..!!
கடனில் மூழ்கியிருக்கும் வோடஃபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்துக்கு , அதன் தாய் நிறுவனமான வோடஃபோன் குரூப் பிஎல்சி மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் ரூ.14,500 கோடி நிதி அளித்துள்ளது.
இந்த நிதி, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்லிமிடெட் ஆகியவற்றுடன் போட்டியிட வோடஃபோஃனுக்கு உதவும் என்றும், வெளி முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி பெறுவதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
நிறுவனத்தின் வாரியம் வியாழனன்று, 3.38 பில்லியன் பங்குகளை வோடாஃபோன் குழுமம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு தலா ரூ.13.3 என்ற விலையில் விற்க ஒப்புதல் அளித்தது. முதலீட்டாளர்களிடமிருந்து ஈக்விட்டி மற்றும் கடன் மூலம் ரூ.10,000 கோடி கூடுதல் நிதி திரட்டப்பட்டது.
வியாழன் அன்று பிஎஸ்இ-யில் வோடஃபோன் ஐடியாவின் பங்குகள் 6.13% உயர்ந்து ரூ.11.08-ஆக இருந்தது, சென்செக்ஸ் 0.66% சரிந்து 55,102.68 புள்ளிகளில் முடிவடைந்தது.
வோடஃபோன் ஐடியாவின் இயக்குநர்கள், நிறுவனத்தில் 36% பங்குகளுடன் அரசாங்கத்தை அதன் மிகப்பெரிய பங்குதாரராக மாற்றும் திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தனர்.