சிக்கலில் வோடபோன் ஐடியா..
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த வோடபோன் நிறுவனம் தற்போது கடனை கட்டமுடியாமல் நீதிமன்றத்தில் கைகட்டி பதில் தரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. தங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த அபராதம் காரணமாக தங்களால் வணிகத்ததை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாககூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் தங்களால் கட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.எவ்வளவு பணம் கட்டவேண்டும் என்ற பிழையான தொகையையும் கட்டச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் வி நிறுவனம் நீதிமன்றத்தில் கேட்டுள்ளது கடன் தொகை, கடனுக்கு வட்டி, வட்டிக்கு ஒரு வட்டி போட்டால் தங்களால் பிழைப்பு நடத்த இயலாது என்று தங்கள் நிலையை தெரிவித்துள்ளனர். எவ்வளவு வருமானம் வருகிறதோ அதற்கு தகுந்தபடி உரிமக் கட்டணம் மற்ரும் அலக்கற்றை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தேசிய தொலைதொடர்பு கொள்கை 1999-இன்படி பணத்தை செலுத்தவில்லை என்பதுதான் புகார்.இதையடுத்து தேசிய தொலை தொடர்பு விவகாரங்கள் மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கில் வி நிறுவனம் சீராய்வு மனுவையும் அளித்துள்ளது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது