கடனில் சிக்கியுள்ள வோடாஃபோன் ஐடியா..பங்குகள் 47.61% உயர்வு..!!
வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக செபியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யூரோ பசிபிக் செக்யூரிட்டீஸ், ப்ரைம் மெட்டல்ஸ் மற்றும் ஒரியானா இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ. 13.30 என்ற அளவில் 338.3 கோடி ஈக்விட்டி பங்குகளை சுமார் ரூ.4,500 கோடிக்கு ஒதுக்கீடு செய்ய வோடபோன் ஐடியா குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வியாழன் அன்று தெரிவித்திருந்தது.
இதற்கு முன்பு நிறுவனம் வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) இல் 44.39 சதவீத பங்குகளை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.