வோடஃபோன் பங்குகள் வீழ்ச்சி..
வோடஃபோன் ஐடியா நிறுவன பங்குகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியில் ஒரு பங்கின் விலை இண்ட்ராடேவில் 11ஆயிரத்து40 ரூபாயாக சரிந்தது. வழக்கமான வணிகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 11 ரூபாய் 70 காசுகளாக இருந்த இந்த பங்கு ,இரண்டரை விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் வெரிசான்,அமேசான் மற்றும் ஸ்டார்லிங் நிறுவனங்கள் வோடஃபோன் ஐடியாவை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் கடந்தவாரத்தில் வெளியானது. இதனை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவன பங்குகள் தொடர்பான தகவலை சுட்டிக்காட்டியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்கள் வோடபோன் ஐடியாவை வாங்குவதாக வெளியாக தகவலில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நடந்த அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்று, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய,ஆயிரத்து 701 கோடி ரூபாயை அண்மையில்தான் வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்தியது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை 6 ரூபாய் 35 பைசாவாக இருந்த இந்த பங்கின்விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அண்மையில் இந்த நிறுவன பங்குகளின் விலை 12ரூபாய் 50 காசுகள் வரை உயர்ந்தன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 ரூபாய் 60 காசுகளாக இருந்த பங்கு 12 ரூபாய் 50 காசுகள் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த 4 வாரங்களாக இந்த பங்கு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் திடீரென வெளியான தகவலால் ஏறியவேகத்தில் இறக்கத்தை சந்தித்துள்ளது.